வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி கிடையாது - உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

Nov 8 2019 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி அளிக்கப்படாது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி, படப்பரிவர்த்தனை, வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி சேவையில் கோலோச்சி வரும் வாட்ஸ்ஆப் நிறுவனம், அடுத்த கட்டமாக பணப்பரிவர்த்தனை சேவையில் ஈடுபட முடிவு செய்து கடந்த மே மாதம், சோதனை அடிப்படையில் சேவையை தொடங்கியது. இந்தியாவில் வாட்ஸ்ஆப்பின் பணப்பரிவர்த்தனை சேவைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ள ஆர்.பி.ஐ, இந்தியாவில் பணப்பரிவர்த்தனை சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள், அதற்கான தகவல்களை இந்திய சர்வரில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்ற விதி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் அந்த வசதி இல்லாததால், பணப்பரிவர்த்தனை சேவைக்கு அனுமதி வழங்கக்கூடாதென என்.பி.சி.ஐ. எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகத்தை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00