மஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் - குஜராத், அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட 17 மாநிலங்களில், 51 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு

Oct 21 2019 9:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணியும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் போட்டியிட்டன. ஹரியானாவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலில், மும்பை உட்பட பல்வேறு இடங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். புனே, நாக்பூர், நாஷிக், அவுரங்காபாத் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் பதிவான வாக்குகளைவிட, கிராமப் புறங்களில், அதிக வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிராவில் மாலை 5 மணி நிலவரப்படி 54.53 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஓரிரு அசம்பாவித நிகழ்வுகளைத் தவிர, பொதுவாக அமைதியான வாக்‍குப்பதிவு நடைபெற்றது. Nuh மாவட்டத்தில் Malaaka கிராம வாக்‍குச்சாவடியில், இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, சரமாரியாக கற்கள் வீசப்பட்டதில் ஒரு பெண் காயமடைந்தார். Nuh மாவட்டத்தின் மேலும் சில இடங்களில், மோதல்களும், ஒரு துப்பாக்‍கிச்சூடு சம்பவமும் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

மகாராஷ்டிராவில் 6 மணி நிலவரப்படி 60.5 சதவீத வாக்குகளும், ஹரியானாவில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00