ஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை

Oct 17 2019 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. பின்னர், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகரின் பிரதாப் பூங்கா அருகே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா மகள் சபியா உள்பட 13 பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், போராடத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் பரூக் அப்துல்லாவின் மகள் சபியா மற்றும் சகோதரி சுரையா உள்பட 13 பெண்களையும் ஜாமீனில் விடுவித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00