அயோத்தி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு - 3 நாட்களில் அனைத்துத் தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்‍கல் செய்ய உத்தரவு

Oct 16 2019 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில், கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு விசாரணை, நிறைவடைந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக்‍ குழு மூலம், பிரச்னைக்‍கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்‍கை, வார விடுமுறை நாட்களை தவிர தினந்தோறும் நடத்தி வந்தது. வழக்கு விசாரணையை இன்றுடன் முடிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, 40-வது நாளான இன்று, அயோத்தி வழக்‍கு தொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து, அயோத்தி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை, 3 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த, இந்து மகாசபை வழக்கறிஞர் திரு.வருண் சின்ஹா, அயோத்தி வழக்கில் இன்னும் 23 நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00