ஜம்மு - காஷ்மீரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சுதந்திரம் வேண்டுமென ஆப்பிள்களில் எழுதி விற்பனை

Oct 16 2019 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீரில் சுதந்திரம் வேண்டுமென ஆப்பிள்களில் எழுதி விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த ஆப்பிள்களை கைப்பற்றி பாதுகாப்புப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அம்மாநில அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அண்மையில், ஒருசில கட்சித்தலைவர்கள் விடுவிக்கப்பட்டாலும், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா,ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் செல்போன் சேவை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, எஸ்.எம்.எஸ். சேவைகள் துண்டிக்கப்பட்டன. இணைய சேவை இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், மாநிலம் முழுவதும் இன்னும் பொதுப்போக்குவரத்து சீரடையவில்லை. முக்கிய சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவை தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 73-வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து கத்துவா மாவட்டத்திற்கு வந்த ஆப்பிள்களில் "எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்" என ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில், கருப்பு மையினால் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள்களை கைப்பற்றிய காவல்துறையினர், இவற்றை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00