ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை வெள்ளிக்‍கிழமைக்‍கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

Oct 16 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்‍கிழமைக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, முறைகேடாக 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. காவல் நிறைவடைந்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 5-ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்றக்‍காவல், நாளை வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது. இதனிடையே திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்திய அமலாக்‍கத்துறை, அவரை கைது செய்தது. அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00