நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் 3.99-ஆக அதிகரிப்பு - உணவுப் பொருட்களின் விலைவாசி குறியீடு கடந்த ஆண்டை விட 10 மடங்கு உயர்வு

Oct 14 2019 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண், 3.99 சதவீதமாக அதிகரித்துள்ளது.

காய்கறி, பழங்கள் உட்பட உணவு, உடை, எரிபொருள் ஆகிய முக்கிய பொருட்களின் விலைவாசியை குறிக்கும் நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்ணை மத்திய அரசு, மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் குறியீட்டு எண், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2.25-ஆக இருந்த கிராமப்புற நுகர்வோர் குறியீட்டு எண், 3.24-ஆக உயர்ந்துள்ளது. இது கிராமப்புறங்களில் விலைவாசி உயர்ந்துள்ளதை காட்டுகிறது. நகர்ப்புற குறியீட்டு எண் 4.49-லிருந்து 4.78-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒருங்கிணைந்த நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் 3.28-லிருந்து 3.99-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 0.85-ஆக இருந்த உணவுப்பொருட்களின் விலைவாசி குறியீட்டு எண், 3.22-ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புற உணவுபொருட்கள் விலைவாசி குறியீட்டு எண் 8.76-ஆக உயர்ந்துள்ளதோடு, ஒருங்கிணைந்த விகிதம் 5.11-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, உணவுப்பொருட்களின் விலைவாசி குறியீட்டு எண் 3 மடங்கு உயர்ந்துள்ளதோடு, கடந்த ஆண்டை விட 10 மடங்கு விலைவாசி அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00