ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் 3 பேர் விடுதலை

Oct 10 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு அண்மையில், ஜம்முவில் இருந்து சில தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், ரபியாபாத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யவார் மிர், தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் நூர் முகமது, காங்கிரஸ் நிர்வாகி சோயப் லோன் ஆகியோர் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நன்னடத்தை உள்ளிட்ட சில நடவடிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00