ராணுவ வீரர்களின் தியாகத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சு

Oct 10 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராணுவ வீரர்களின் தியாகத்தையும், துணிவையும் பயன்படுத்தி, பிரதமர் திரு. நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பதைப் போல, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒருபோதும் வாக்கு சேகரிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.சரத் பவார், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு விமானப் படை மூலம் பதிலடி கொடுக்கப்பட்டதை கூறி, நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரித்தார் என்றும், ஆனால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இது போன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்றும் தெரிவித்தார்.

விமானப் ப‌டை கொடுத்த பதிலடியை டெல்லியில் இருந்து கொண்டு தாங்கள் செய்ததாக பிரதமர் மோடி பெருமை கொள்கிறார் என்றும், மஹராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், திரு. சரத் பவார் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00