தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் 2,120 பேர் உயிரிழப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

Oct 10 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்மேற்கு பருவமழைக்கு நாடு முழுவதும் சுமார் 2,120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46 பேர் மாயமாகியுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்‍கை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்தது. 4 மாதங்களாக நீடித்த இந்த மழை, வட மாநிலங்களுக்‍கு, ஓராண்டுக்‍கு தேவையான நீரை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு, வழக்கத்தை விட கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தென்மேற்கு பருவமழை, அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்‍கை வெளியிட்டுள்ளது.

அறிக்‍கையின்படி, தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் 357 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டுள்ளன. 2,120 பேர் உயிரிழந்துள்ளனர். 738 காயமடைந்துள்ளனர். 46 பேர் மாயமாகிவுள்ளனர். வெள்ளத்தால், 7 லட்சத்துக்‍கும் அதிகமான மக்‍கள் பாதிக்‍கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 1 லட்சத்துக்‍கும் அதிகமான வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளன. 20 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 14 லட்சம் ஹெக்டேர் பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00