டென்மார்க் மாநாட்டில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்‍கு அனுமதி மறுக்‍கப்பட்ட விவகாரம் - மேயர்கள் பங்கேற்கும் மாநாடு என்பதாலேயே அனுமதி இல்லை என மத்திய அரசு விளக்‍கம்

Oct 10 2019 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
டென்மார்க்கில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில், மேயர்கள் மட்டும் கலந்து கொள்வதாலேயே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

டென்மார்க் தலைநகர் Copenhagen-ல் நடைபெறும் பருவநிலை உச்சிமாநாட்டில், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான இந்தியக்‍ குழு பங்கேற்கும் என ஏற்கெனவே அறிவிக்‍கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை, டெல்லியிலிருந்து திரு. கெஜ்ரிவால், விமானம் மூலம் டென்மார்க்‍ செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கெஜ்ரிவாலின் டென்மார்க் பயணத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த மாநாட்டில் மேயர் அளவிலான அதிகாரம் கொண்ட தலைவர்களே கலந்துகொள்வதாகவும், அதனாலேயே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் இதே மாநாட்டில் பங்கேற்றுள்ளதாகவும், மத்திய அரசின் இந்த காரணம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00