ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் - விண்வெளிக்‍கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் பேட்டி

Sep 21 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரமுடன் தகவல் தொடர்பை மீட்டெடுக்‍க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். அதேநேரம், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாக அவர் கூறினார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் கருவியான விக்‍ரம், கடந்த 7ம் தேதி, நிலவின் குறிப்பிட்ட இடத்தில் தடம் பதிக்‍க வேண்டிய கடைசி நேரத்தில், தகவல் தொடர்பை இழந்தது.

அதேநேரம், ஹாட் லேண்டிங் தொழில்நுட்ப முறையில் நிலவில் தரையிறங்கிய விக்‍ரம் லேண்டர், அசைவற்ற நிலையில் இருந்தது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் களமிறங்கியது. ஆனாலும் விக்‍ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத சூழலில், நேற்றுடன், லேண்டர் கருவியின் ஆயுட்காலம் முடிவடைந்தது.

இந்நிலையில், லேண்டர் கருவியான விக்‍ரமுடன் தகவல் தொடர்பை மீட்டெடுக்‍க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். அதேநேரம், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்படுவதாகவும், ஆர்பிட்டரில் உள்ள 8 கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்ததாக, விண்வெளிக்‍கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருவதாகவும் திரு. சிவன் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00