அயோத்தி வழக்கு விசாரணையின் நேரம் அதிகரிப்பு - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவிப்பு

Sep 20 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கு விசாரணை, வரும் திங்கட்கிழமை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக்‍ குழு மூலம், பிரச்னைக்‍கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்‍கை, வார விடுமுறை நாட்களை தவிர தினந்தோறும் நடத்தி வருகிறது. 25 நாட்களுக்‍கும் மேலாக, வாதபிரதிவாதங்கள் நடைபெற்றுவரும் சூழலில், வரும் அக்‍டோபர் 18ம் தேதியுடன், வாதங்களை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனக்‍ கூறப்படுகிறது.

இந்நிலையில், அயோத்தி வழக்கு விசாரணையின் நேரம் அதிகரிக்‍கப்பட்டுள்ளது. தினந்தோறும் மாலை 4 மணிவரை நடைபெற்றுவந்த விசாரணை, வரும் திங்கட்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00