பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் விமானங்கள் பறக்‍க அனுமதி மறுக்‍கப்பட்ட விவகாரம் - சர்வதேச அரங்கில் பிரச்சனை எழுப்ப இந்தியா திட்டம்

Sep 20 2019 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. மோடி ஆகியோரின் விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அந்நாடு அனுமதி வழங்க மறுத்துவிட்ட விவகாரத்தை, சர்வதேச அரங்கில் எழுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாளை மறுதினம் முதல் வரும் 28ம் தேதி வரை அமெரிக்‍காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர், நாளை, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்‍கா புறப்படுகிறார். இதனிடையே, பிரதமரின் விமானம், பாகிஸ்தான் வான் வழியே செல்ல அனுமதி அளிக்‍க வேண்டும் என இந்தியா அனுமதி கோரியது.

ஆலோசனைக்‍கு பிறகு அனுமதி குறித்து சொல்வதாக தெரிவித்த பாகிஸ்தான், அனுமதி அளிக்‍க முடியாது என தற்போது தெரிவித்துள்ளது. இந்திய தலைவர்களின் விமானங்கள், பாகிஸ்தான் வான் பறப்பில் பறக்‍க அனுமதி அளிக்‍க முடியாது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.

ஒரு தேசத்தின் முதன்மையான தலைவர்களுக்‍கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது என்று இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் கோகலே, பாகிஸ்தான் தனது வான் பரப்பில் இந்திய தலைவர்களின் விமானங்கள் பறக்க அனுமதியளிக்காதது, இது இரண்டாவது முறை எனக் கூறினார். இவ்விவகாரத்தை சர்வதேச அரங்கில் இந்தியா எழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00