காஷ்மீர் தலைவர்களை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்‍க மாநில அரசு புதிய நிபந்தனை - அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி அளித்தால் விடுவிப்பு

Sep 20 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் தலைவர்கள், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுக்‍ கொடுத்தால், விடுதலை செய்வோம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் 370 சட்டப்பிரிவு கடந்த மாதம் 5ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள் திரு. ஃபரூக்‍ அப்துல்லா, திருமதி. மெகபூபா முஃப்தி உள்ளிட்ட முக்‍கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி வருவதையொட்டி, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால், வீட்டுக்‍காவலில் அடைக்‍கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் விடுவிக்‍கப்படவில்லை.

இந்நிலையில், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டால், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் தலைவர்கள், விடுதலை செய்யப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசின் நிபந்தனையை ஏற்று, விடுதலைக்குப் பிறகு எந்த அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம் என்று, ஹூரியத் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக், தேசிய மாநாட்டு கட்சியின் 2 தலைவர்கள், மக்கள் ஜனநாயக கட்சியின் 2 தலைவர்கள் என 5 பேர், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00