தெலங்கானா மாநிலத்தில் நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மனித எலும்புக் கூடு - காவல்துறை தீவிர விசாரணை

Sep 19 2019 7:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானா மாநிலத்தில், நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை நிலத்திலிருந்து, மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாகார்ஜூனா, இயற்கை விவசாயம் செய்வதற்காக தெலங்கானா மாநிலத்தில் உள்ள பாப்பிரெட்டிகுடா பகுதியில் 40 ஏக்கர் விளை நிலத்தை வாங்கியுள்ளார். அங்கு பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாத பண்ணை வீட்டை சுத்தம் செய்ய பணியாட்களையும், மண்வளத்தை பரிசோதிக்க நிபுணர் குழுவையும் அப்பகுதிக்கு நாகார்ஜூனா அனுப்பியுள்ளார். பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த வீட்டில் பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த அறையில், மனித எலும்புக் கூடு கிடந்துள்ளது. அதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், எலும்புக் கூடை கைப்பற்றி, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த எலும்புக்கூடாக கிடந்த நபருக்கு 35 வயது இருக்கலாம் என்றும், அவர் 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00