பல கோடி ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்‍கு - லண்டனில் சிறைவைக்‍கப்பட்டுள்ள நிரவ் மோடியின் நீதிமன்றக்‍ காவல் அக்‍டோபர் 17-ம் தேதி வரை நீட்டிப்பு

Sep 19 2019 8:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
பல கோடி ரூபாய் வங்கி மோசடியில் சிக்‍கி லண்டனில் சிறைவைக்‍கப்பட்டுள்ள நிரவ் மோடியின் நீதிமன்றக்‍ காவல் அக்‍டோபர் 17ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ​நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி​ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்‍கைக்‍கு பயந்து லண்டன் தப்பிச் சென்றார். அங்குள்ள Wandsworth சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், நிரவ் மோடி ஏற்கெனவே 4 முறை தாக்‍கல் செய்த ஜாமின் மனுக்‍கள் நிராகரிக்‍கப்பட்டன. நிரவ் மோடிக்‍கு எதிராக ஆதாரங்கள் வலிமையாக இருப்பதால், அவருக்‍கு ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவரது காவலை அக்‍டோபர் 17ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது. நிரவ் மோடியை இந்தியாவுக்‍கு நாடு கடத்த அமலாக்‍கத்துறை தொடர்ந்துள்ள வழக்‍கு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்‍காட்டி, நிரவ் மோடிக்‍கு நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. நிரவ் மோடியை நாடு கடத்த இந்தியா தொடர்ந்துள்ள வழக்‍கு அடுத்த ஆண்டு மே மாதத்தில் விசாரணைக்‍கு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00