ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்ற லாரி பறிமுதல் - உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால், பயங்கர சதித்திட்டம் முறியடிப்பு

Sep 12 2019 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்ற லாரியை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய நேரத்தில் லாரி தடுத்து நிறுத்தப்பட்டதால், மிகப்பெரிய தாக்குதல் தடுக்‍கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்‍கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்‍கப்படும் என அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்‍கைக்‍கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஷ்மீரில், தீவிரவாத தாக்‍குலோ, வன்முறையோ நிகழாமல் தடுக்‍க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், எல்லை வழியாக, காஷ்மீருக்‍குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சித்து வருவதாகவும், சில தீவிரவாதிகள் ஏற்கனவே ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்‍கை விடுத்தது. இதனால், ஜம்மு காஷ்மீரில், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சென்ற லாரியை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய நேரத்தில், லாரி தடுத்து நிறுத்தப்பட்டதால், மிகப்பெரிய தாக்குதல் தடுக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00