டெல்லி அருகே காசியாபாத்தில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் - மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

Sep 10 2019 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி அருகே காசியாபாத்தில் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மென்பொறியாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த 35 வயது மென்பொறியாளர் ஒருவர், தனது காரில், வயதான பெற்றோருடன் சென்று கொண்டிருந்தபோது, காசியாபாத் அருகே சோதனைக்காக அவரது கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, சோதனை என்ற பெயரில் போக்‍குவரத்து போலீசார் கடுமையாக நடந்து கொண்டதால் மென்பொறியாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நீரிழிவு நோயாளியான மென்பொறியாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் என்ற பெயரில் போக்குவரத்து போலீசார் கடுமையாக நடந்து கொண்டதால்தான் தனது மகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மென்பொறியளாரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நொய்டா போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00