ஏர்செல் மேக்‍சிஸ் வழக்‍கில் முன்ஜாமின் மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படும் வரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்யத் தடை நீட்டிப்பு - டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Aug 23 2019 8:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுக்கள் மீது வரும் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை, இவ்வழக்‍கில் இருவரையும் கைது செய்ய தடை நீட்டிக்‍கப்படுவதாகவும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகனும், காங்கிரசின் தற்போதைய மக்‍களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க சிதம்பரம் மற்றும் கார்த்தி தரப்பில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று வரை அவர்களை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இவ்வழக்‍கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், முன்ஜாமின் மனுக்‍கள் மீது வரும் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை இவ்வழக்‍கில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்‍கப்படுவதாகவும் நீதிபதி சைனி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00