ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கில் ப.சிதம்பரத்தை அமலாக்‍கப்பிரிவு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை - சி.பி.ஐ. காவலில் தொடர்ந்து விசாரிக்‍க அனுமதி

Aug 23 2019 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்வதற்கு தடை கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பத்திற்கு 10 நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாகவும் 17 வெளிநாட்டு வங்கி கணக்குகள் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். சிதம்பரத்தை காவலில் எடுக்காமல் எந்த தகவல்களையும் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் சிங்வி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 26ம் தேதி வரை சிதம்பரத்தை அமலாக்கத் துறையினர் கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ப. சிதம்பரத்தின் ஜாமின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, வரும் திங்கட்கிழமைக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது. இன்று நடைபெற்ற இந்த வழக்‍கு விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல், திரு. ப.சிதம்பரத்தை, சி.பி.ஐ. காவலில் எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் வரும் திங்கட் கிழமைக்‍கு ஒத்தி வைக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00