ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைது : இரவில், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்

Aug 22 2019 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இரவில், வீட்டின் சுவர் ஏறிக் குதித்த சி.பி.ஐ. அதிகாரிகள், பரபரப்பான போராட்டத்திற்குப் பிறகு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடாகப் பெற அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், இதில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்க ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்ததைத் தொடந்து, அவரை கைது செய்ய சி.பி.ஐ., மற்றும் அமலாகத்துறை அதிகாரிகள் அன்று இரவே அவரது வீட்டை முற்றுகை இட்டனர். ஆனால் அவர் இல்லாததால் அவரை கைது செய்யமுடியாமல் திரும்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்கூட்டியே கைது செய்ய தடை விதிக்கக்கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த சிறப்பு முறையீட்டு மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

இதனிடையே ப.சிதம்பரம், வழக்கை எதிர்கொள்ள பயந்து ஓடிஒளிவதாக பா.ஜ.க.,வினர் குற்றம் சாட்டினர். அதனால் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி அலுவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை தெரிவித்தார். சட்டத்தின் பிடியிலிருந்து, தான் தப்பி ஓடுவதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புலனாய்வு நிறுவனங்கள் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து, ஜோர் பாக்கிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற ப.சிதம்பரத்தை பின் தொடர்ந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சுவர் ஏறிக்குதித்து சிதம்பரத்தின் வீட்டிற்குள் சென்றனர். மூன்று குழுக்களாக சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகை இட்டனர். சி.பி.ஐ. அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து, அவரது வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர பரபரப்புக்குப் பிறகு, சி.பி.ஐ. அதிகாரிகள், ப. சிதம்பரத்தை கைது செய்து, சி.பி.ஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு ப.சிதம்பரத்தின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00