உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு, விசாரணைக்‍கு வராததால், சிதம்பரத்திற்கு நெருக்‍கடி முற்றுகிறது -வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்‍கு மத்திய அமலாக்‍கத்துறை இயக்‍குனரகம் சுற்றறிக்‍கை

Aug 21 2019 8:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
INX மீடியா நிறுவன ஊழல் வழக்‍கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வராததால், சிதம்பரத்திற்கு நெருக்‍கடி முற்றுகிறது. இந்திய எல்லையைத் தாண்டி ப.சிதம்பரம் வெளியே செல்லாமல் தடுக்குமாறு, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்‍கு மத்திய அமலாக்‍கத்துறை இயக்‍குனரகம் சுற்றறிக்‍கை அனுப்பியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில், திரு.ப.சிதம்பரம் நிதியமைச்சராகப் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்‍கை தாக்‍கல் செய்தன.

குற்றப்பத்திரிக்‍கையில், ப.சிதம்பரத்தின் பெயர் இல்லாததையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்‍க, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அனுமதி கோரின. இதையடுத்து, தான் கைது செய்யப்படலாம் என்பதால், சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுக்‍களை நீதிமன்றம் நேற்று நிராகரித்து. இதையடுத்து, ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை அவசர வழக்‍காக கருதி விசாரணை நடத்த சிதம்பரம் தரப்பில் கோரிக்‍கை வைத்து மூத்த வழக்‍கறிஞர் கபில் சிபில் இன்று உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா அமர்வு, இந்த மனுவை விசாரிக்‍க மறுத்துவிட்டது. திரு. ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததை அடுத்து, அவரைக்‍ கைது செய்ய டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்‍கத்துறை அதிகாரிகள் சென்றபோது, திரு. சிதம்பரம் வீட்டில் இல்லை. அவர் எங்கு இருக்‍கிறார் என்பதும் தெரியவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00