கேரள வெள்ள பாதிப்பை பார்வையிட்டபோது சமோசா சாப்பிட்டாரா ராகுல்?

Aug 19 2019 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள வெள்ள பாதிப்பை பார்வையிட்டபோது, திரு. ராகுல் காந்தி, சமோசா சாப்பிட்டுக்‍ கொண்டிருந்ததாக கேலி செய்து, இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ, 4 மாதங்களுக்‍கு முன்னர் எடுக்‍கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

எழுத்தாளர் மது பூர்னிமா கிஷ்வர், தனது டிவிட்டர் பக்‍கத்தில், வயநாடு காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி, கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் விதத்தை பாருங்கள் என, கேலி செய்யும் விதத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். வீடியோவில், ராகுல், சமோசா சாப்பிடும் காட்சிகள் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த வீடியோ குறித்து உண்மை கண்டறியப்பட்ட நிலையில், ராகுல் சமோசா சாப்பிடும் வீடியோ, கடந்த ஏப்ரல் மாதம் எடுக்‍கப்பட்டது தெரியவந்துள்ளது. மக்‍களவை தேர்தலுக்கு முன், மத்தியப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது வீடியோ எடுக்‍கப்பட்டு, ஏப்ரல் 24ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோவிற்கும், ராகுல் காந்தியின் வயநாடு ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல், வீடியோக்‍களை பரப்பாதீர்கள் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00