ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்கியதில் முறைகேடு - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன்

Aug 19 2019 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுபியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு போயிங் நிறுவனத்திடமிருந்து, 68 விமானங்கள் வாங்கப்பட்டன. இதேபோல் 2006-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்கள் வாங்கப்பட்டன. விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது, யாரெல்லாம் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று ஆராய்ந்து, இடைத்தரகர் உட்பட அனைவரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் ஆகஸ்ட் 23ம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00