மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன்சிங் மீண்டும் தேர்வு - போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாமல் பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தாததால் போட்டியின்றி தேர்வானார்

Aug 19 2019 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

திரு. மன்மோகன் சிங், அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு, இதுவரை, 5 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. அவரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய காங்கிரஸ் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கடந்தாண்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வை சேர்ந்த திரு. மதன்லால் சைனி கடந்த ஜூன் 24ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அந்த கட்சிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ளதால் திரு.மன்மோகன் சிங் அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்‍கு வேட்புமனு தாக்‍கல் செய்தார். போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால், அவரை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து, திரு. மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினராக, ராஜஸ்தானில் இருந்து, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00