கர்நாடகாவில் காபி தோட்டங்களை யானை கூட்டங்கள் நாசம் செய்ததாக விவசாயிகள் வேதனை : உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
Nov 20 2023 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் காபி தோட்டங்களை குறி வைத்து யானை கூட்டங்கள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் காப்பி, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவ்வப்பொழுது வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள், விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவில் உள்ள பிக்கோடு கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் புகுந்த சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், காபி, வாழை போன்ற பயிர்களை நாசம் செய்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.