நிலவிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டம் : 2028-ம் ஆண்டு திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ள இஸ்ரோ
Nov 20 2023 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிலவிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து முதல் ஏழு வருடங்களுக்குள் நிலவு மாதிரியை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ ஆர்வம் காட்டி வருவதாக இஸ்ரோ எஸ்ஏசி இயக்குநர் நிலேஷ் தேசாய் தெரிவித்திருக்கிறார். சந்திரயான்-3 தரையிறங்கிய சிவ சக்தி புள்ளியில் இருந்தே நிலவின் மாதிரிகளை சேகரிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்திரயான்-3 திட்டத்தைப் போலவே இதனையும் பூமியின் கணக்கில் 14 நாட்களுக்குள் செயல்படுத்தி முடிக்க இஸ்ரோ திட்டமிட்டு வருதவதாக அவர் கூறியுள்ளார். தற்போது முதற்கட்டமாக இத்திட்டத்தை 2028ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.