உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு : ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.100 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு
Oct 4 2023 6:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதனால் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் பெரும் சிலிண்டருக்கான தொகையை மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 900 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.