மகாராஷ்டிராவில் மருத்துவமனை டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி : எம்.பி. ஹேமந்த் பாட்டீல் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு
Oct 4 2023 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிராவில் நான்டெட் அரசு மருத்துவமனையின் டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி ஹேமந்த் பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 31 நோயாளிகள் இறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் அம்மருத்துவமனையின் தற்காலிக டீன் ஷ்யாம் வகோடே கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி ஒன்று வெளியானது. சிவசேனா எம்பி ஹேமந்த் பாட்டீல், தற்காலிக டீன் வகோடேவை அரசு மருத்துவமனையின் அசுத்தமான கழிவறை மற்றும் சிறுநீர் கழிக்கும் அறைகளை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்தார். இதனைத் தொடர்ந்து டீன் கொடுத்த புகாரின் பேரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினைச் சேர்ந்த எம்.பி., ஹேமந்த் பாட்டீல் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.