காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் அக்டோபர் 12-ந் தேதி கூடுகிறது : தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி பிரச்சினை நீடித்து வரும் நிலையில் கூட்டம்
Oct 4 2023 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் அக்டோபர் 12-ந் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகா கூறி வருகிறது. இதுகுறித்து காவிரி ஆணையம் எந்த முடிவும் எடுக்காத நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88-வது கூட்டம் 12-ம் தேதி கூட உள்ளது.