உத்தரப்பிரதேசத்தில் ரயில் எஞ்சின் பிளாட்பாரம் மீது ஏறி நின்ற விபத்தில் திருப்பம் : ஓட்டுநர் செல்போனை பார்த்துக்கொண்டே ரயில் ஓட்டியது கண்டுபிடிப்பு
Sep 28 2023 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டு ரயில் எஞ்சின் பிளாட்பாரம் மீது ஏறி நின்ற நிலையில், ரயில் ஓட்டுநர் செல்போனை பயன்படுத்திக்கொண்டே ரயிலை இயக்க முயன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் ஒன்று மதுரா ரயில் நிலையத்தில் எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயிலில் இருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ரயில் ஓட்டுநரான சச்சின், செல்போனை பார்த்துக்கொண்டே ரயிலுக்குள் நுழைவதும், அவர் ஏறிய சில நிமிடங்களிலேயே ரயில் தடம் புரண்டதும் தெரியவந்துள்ளது.