உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும் முயற்சி பாராட்டுக்குரியது : பாரத உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டுகள் என பிரதமர் மோடி பேச்சு
Sep 23 2023 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும் முயற்சி பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும் முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறினார். இந்திய உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டுகள் என்பதற்கு பதிலாக பாரத உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டுகள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.