டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு : மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிப்பு
Sep 23 2023 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நாட்டிலேயே முதல்முறையாக நடைபெறுகிறது. நீதி வழங்கல் அமைப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில், வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு சட்டத் தலைப்புகளில் உரையாடல் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.