புதுச்சேரியில் வரும் அக். 2ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை : விரைவில் புதுச்சேரி - டெல்லிக்கு நேரடியாக விமான சேவை தொடங்கம் என அதிகாரிகள் தகவல்
Sep 23 2023 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது. பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜூன் மாதம் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரிக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாபயணிகள் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து, வரும் அக்டோபர் முதல் மீண்டும் விமான சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத், டெல்லி விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் டெல்லிக்கு புதுச்சேரியில் இருந்து நேரடியாக விமான சேவை துவங்க இருப்பதாகவும், இதனால் பயணிகள் மிகவும் பயனடைவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.