கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் அறிவிப்பு : துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரிப்பு
Sep 23 2023 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து, கர்நாடக மாநிலம் மண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
விவசாயிகள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மாண்டியா நகரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கன்னட அமைப்பினரும் விவசாயிகளும் சாலைகளில் படுக்கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர் வாகன பேரணிகளை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, கே.ஆர்.எஸ். அணைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.