கர்நாடகாவில் தீவிரமடையும் காவிரி போராட்டம் : பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு
Sep 23 2023 10:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் காவிரி தொடர்பான போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரைக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.