9 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி : காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க ஏற்பாடு
Sep 23 2023 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை - சென்னை இடையே நாளை தொடங்க உள்ள வந்தே பாரத் ரயிலின் முன்பதிவு தொடங்கியுள்ளது. நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சாதாரண ஏசி சேர் கார் இருக்கைக்கு ஆயிரத்து 610 ரூபாயாகவும், முதல் வகுப்பு ஏசி சேர் காருக்கு 3 ஆயிரத்து 5 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், உணவு கட்டணமாக சாதாரண ஏசி சேர் கார் வகுப்பிற்கு 308 ரூபாயும், முதல் வகுப்பு ஏசி சேர் கார் வகுப்பிற்கு 369 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.