மத்தியப் பிரதேசத்தில் மீட்புப் பணியின் போது 50 அடி ஆழத்துக்கு சென்ற இரண்டரை வயது குழந்தை : நவீன ரோபோ உதவியுடன் குழந்தையை மீட்க நடவடிக்கை
Jun 8 2023 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 நாட்களாக தவிக்கும் குழந்தையை ரோபோ உதவியுடன் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் Sehore மாவட்டத்தில் உள்ள Mugavali கிராமத்தில், வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை, அப்பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது. 20 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்த குழந்தை, மீட்புப் பணியின் போது 50 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. குழந்தை விழுந்து 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மீட்புப் பணியில் முன்னேற்றம் காணப்படாததால், நவீன ரோபோ உதவியுடன் குழந்தையை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.