நாடு முழுவதும் புழக்கத்திலிருந்த ரூ.2,000 நோட்டுகள் 50% வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Jun 8 2023 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் புழக்கத்திலிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 50 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறப்படும் என்றும், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள், வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 20 நாட்களுக்குள், இதுவரை புழக்கத்தில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 50 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. திரும்ப வந்த நோட்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் கூட்டத்தை தவிர்க்க, இப்போதிருந்தே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி விடுமாறும், செப்டம்பர் 30 வரை காத்திருக்க தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.