ஷாருக்கானின் மகன் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சமீர் வான்கடேவை கைது செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை
Jun 8 2023 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், விசாரணை அதிகாரியாக செயல்பட்ட சமீர் வான்கடேவை கைது செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சமீர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனிடையே தன் மீது திட்டமிட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி சமீர் வான்கடே மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வான்கடேவை சிபிஐ கைது செய்ய கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சமீர் வான்கடேவை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.