ஒடிசா ரயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிடுவோருக்கு போலீசார் எச்சரிக்கை
Jun 5 2023 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, தீய நோக்கத்துடன் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிஷா போலீசார் எச்சரித்துள்ளனர். ரயில் விபத்து குறித்து சில சமூக வலைதளங்களில், மதம் மற்றும் இன ரீதியான பிரிவினையை தூண்டும் வகையில், தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒடிஷா மாநில ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில், தீய நோக்கத்துடன் கூடிய தவறான செய்திகளைப் பரப்புவோர் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.