பீகார் பாகல்பூரில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து : கட்டுமானப் பணியின் போது நேரிட்ட விபத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
Jun 5 2023 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகாரில் கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட பாலம் ஒன்று இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த காட்சி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் ஆகுவனி - சுல்தான்கன்ஜ் இடையே ஆற்றைக் கடக்கும் விதமாக புதிதாக பாலம் கட்டப்பட்டு வந்தது. பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம், திடீரென ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது. பாலம் கட்டிய சுவடே தெரியாமல், பழைய கைவிடப்பட்ட கட்டடம் போல் இடிந்து விழுந்ததை, உள்ளூர் மக்கள் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.