ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு
Jun 4 2023 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆயிரத்து 175 பேரில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறிய நவீன் பட்நாயக், காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார். 382 பயணிகள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.