ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்து வேதனை அளிக்கிறது : உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ட்விட்டர் பதிவு

Jun 3 2023 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மீட்புப்பணிகள் வெற்றி அடையவும், காயம் அடைந்தவர்கள் விரைவாக நலமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது அறிந்து மிகுந்த துயர் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்து கொண்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநிலத்தில் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து செய்தியால் மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். தங்கள் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதற்காவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00