பிரிட்டிஷ் ஆட்சியில் போராட்டக்காரார்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட சட்டபிரிவு 124-A வை மாற்றம் செய்து தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை
Jun 2 2023 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்பதை 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என மாற்றம் செய்ய 22வது சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியில் போராட்டக்காரார்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் தற்போதைய காலக்கட்டத்திற்கு பொருந்தாது என கூறி 'எடிட்டர்ஸ் கில்ட்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இவ்வழக்கை விசாரணை செய்த போது, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக தெரிவித்தது. இதனையடுத்து இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 22 வது சட்ட ஆணையம், இந்த சட்டத்தை சில மாற்றங்களுடன் தொடர வேண்டும், எத்தகைய செயல்களின் கீழ் தேச துரோக சட்டத்தை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. மேலும் 124-ஏ சட்டப்பிரிவை ரத்து செய்தால் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை பயன்படுத்துகிறோம் என்ற போர்வையில் வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அபாயம் இருப்பதாகவும் 22-வது சட்ட ஆணையம் எச்சரித்துள்ளது.