மாதம் 12 நாட்கள் அலுவலகம் வந்து பணியாற்றாத ஊழியர்களுக்கு மெமோ : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிசிஎஸ் நிர்வாகம் எச்சரிக்கை
Jun 1 2023 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாதம் ஒன்றுக்கு குறைந்தது 12 நாட்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து பணியாற்றாத ஊழியர்களுக்கு மெமோ வழங்கப்படும் என டிசிஎஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தங்களது பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்ற டிசிஎஸ் நிர்வாகம் அனுமதித்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் வாரத்துக்கு 3 நாள் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், மாதத்துக்கு குறைந்தது 12 நாட்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிசிஎஸ் நிர்வாகம் எச்சரித்துள்ளது.