கர்நாடகாவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமான விழுந்து நொறுங்கி விபத்து : பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிய 2 பயிற்சி விமானிகள்
Jun 1 2023 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமான விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பயிற்சி விமானிகள் 2 பேர் உயிர் தப்பினர். இந்திய விமானப்படையில் உள்ள வின்டேஜ் ரக பயிற்சி விமானம் கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் உள்ள மக்காலி எனும் கிராமம் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த இரண்டு பயிற்சி விமானிகள் பத்திரமாக பாராசூட் மூலம் தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.