மத்திய கொல்கத்தாவில் ஐந்து மாடி கட்டடத்தில் தீ விபத்து - ஆவணங்கள் நாசம் : கால்நடைத்துறை அலுவலகத்தில் பற்றிய தீயை போராடி அணைத்த தீயணைப்பு துறை
Jun 1 2023 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் ஐந்து மாடி கட்டிடம் தீ விபத்தில் சிக்கியது. மத்திய கொல்கத்தாவில் உள்ள கணேஷ் சந்திரா அவென்யூவில் உள்ள அரசுக்கு சொந்தமான ஐந்து மாடி கட்டிடம் திடீரென தீப்பற்றியது. காலை 10 மணியளவில் ஐந்தாவது மாடியில் உள்ள அரசு கால்நடைத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. பின்னர் ஏணிகள் மூலம் ஏறிய தீயணைப்பு வீரர்கள் ஐந்தாவது தளத்தில் பற்றிய தீயை குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.