தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்றபோது, பெண் தவறி விழுந்து விபத்து : பெண்ணுக்கு கால் எலும்பு முறிந்ததால் மருத்துவமனையில் அனுமதி
Jun 1 2023 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா மாநிலம் கம்மம் ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயிலில் ஏற முற்பட்டபோது, அந்த ரயில் புறப்பட்டதால், பிளாட்பாரத்தில் சிக்கி கால்முறிவு ஏற்பட்டது. கம்மம் மாவட்டம் மதிராவை சேர்ந்த நாகேஸ்வரா என்பவர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவி கல்யாணியுடன் கம்மம் வந்தார். சிகிச்சை முடித்து கொண்டு மீண்டும் மதிரா செல்வதற்காக கம்மம் ரயில்நிலையத்திற்கு வந்தனர். கம்மம் இன்டர்சிட்டி ரயிலில் நாகேஸ்வரா ஏறிய நிலையில், கல்யாணி ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டதால், அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே தவறி விழுந்துவிட்டார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து, பயணிகளும், ரயில்வே பணியாளர்களும் சிரமப்பட்டு கல்யாணியை மீட்டனர். தற்போது அவருக்கு கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.